வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு பதிலாக மிஷெல் ஒபாமா வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக கருத்துகள் நிலவி வருகின்றன.
கடந்த ஜூன் 29ஆம் தேதியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்திருந்தது. அந்த விவாதத்திற்குப் பிறகு ஜோ பைடன் மீது பல்வேறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
அதாவது, டிரம்புடனான ஜோ பைடனின் அந்த விவாதத்தின்போது பல முறை பேச வார்த்தைகள் இல்லாமல் நீண்ட நேரம் யோசித்தது, புரியாமல் பேசியது, அா்த்தமில்லாமல் பதிலளித்தது போன்ற ஜோ பைடனின் தடுமாற்றங்கள் அவரால் இந்தத் தோ்தலில் மக்களின் வாக்குகளைப் பெற முடியுமா என்ற கவலையை அவருடைய ஜனநாயகக் கட்சியினரிடையே ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.