“அமெரிக்க நிறுவனங்களுக்குப் பல வரிச்லுகைகள்” – மல்லிகார்ஜுன கார்கே | “Many tax breaks for American companies” – Mallikarjuna Kharge |

Spread the love

சமீப சில நாள்களாக அடங்கிருந்த இந்தியா – அமெரிக்கா வர்த்தக விவகாரம் இப்போது மீண்டும் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், “பிரதமர் அழுத்தங்களுக்குப் பணிந்துவிட்டார். அவரது துரோகம் இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அவரால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முடியாது. அவர் மீண்டும் ஒருமுறை சரணாகதிதான் அடைவார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ட்ரம்ப் - மோடி

ட்ரம்ப் – மோடி

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வர்த்தக வரிகள் குறித்து, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை காத்திருக்காமல், மோடி அரசு ஏன் அவசரகால கதியில் இந்த “ஒப்பந்தம் எனும் ‘வரி’ வலையில் விழுந்தது? இதன் மூலம் இந்தியா பல முக்கிய சலுகைகளை அமெரிக்காவிற்கு விட்டுக் கொடுத்துள்ளது ஏன்?

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பல பொருட்களுக்கு ‘பூஜ்ஜியம் வரி’ (Zero Tariff) விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய விவசாயச் சந்தையை அமெரிக்கப் பொருட்களுக்குத் திறந்துவிட்டு, உள்ளூர் விவசாயிகளைப் பாதிக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *