அமேதி தொகுதி வேட்பாளரை அறிவிக்ககோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

77
Spread the love

பாராளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. 3-வது கட்ட வாக்குப்பதிவு அடுத்தமாதம் (மே) 7-ந்தேதி 12 மாநிலங்களில் 94 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

உத்திரபிரதேச மாநிலத்தில் எப்போது அமேதி, ரேபரேலி தொகுதிகள் வி.ஐ.பி. அந்தஸ்தை பெற்று இருந்தன. ஆனால் தற்போது இந்த 2 தொகுதிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ்கட்சி இன்னும் அறிவிக்க வில்லை.

கேரளாவில் தேர்தல் முடிந்ததும் கட்சி மேலிடம் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்கும் என்ற நம்பிக்கை தொண்டர்களிடையே இருந்தது, ஆனால் கடந்த 4 நாட்களாக அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு முக்கிய இடங்களுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவிக்காததால் தொணடர்கள் வருத்தம் அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்புக்காக காத்திருந்து கடுப்பான காங்கிரஸ் கட்சியினர் இன்று அங்குள்ள கட்சி அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பதாகைகளை அவர்கள் கையில் வைத்திருந்தனர்.

ஸ்மிருதி இராணி

அமேதி தொகுதியில் இருந்து 3 முறை எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது அவரை எதிர்த்து போட்டியிட்ட மத்திய மந்திரி ஸ்மிருதி இராணியிடம்தோல்வியடைந்தார். இதற்கிடையே ஸ்மிருதி இராணி அமேதி தொகுதியில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ராகுல்காந்தி கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு உள்ளார். அங்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் கூறும்போது, அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *