அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை | Supreme Court stays HC order reversing discharge of Periyasamy case

1373514
Spread the love

புதுடெல்லி: அமைச்​சர் ஐ.பெரிய​சாமி மற்​றும் அவரது குடும்​பத்​தினருக்கு எதி​ரான சொத்​துக் குவிப்பு வழக்​கின் மறு​வி​சா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழக ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் ஐ.பெரிய​சாமி, கடந்த 2006-11 திமுக ஆட்​சி​யில் வீட்​டு​வச​தித் துறை அமைச்​ச​ராக இருந்​தார். அப்​போது, வரு​மானத்​துக்கு அதி​க​மாக ரூ.2 கோடிக்கு சொத்​துக் குவிப்​பில் ஈடு​பட்​ட​தாக புகார் எழுந்​தது. இதுதொடர்​பாக பெரிய​சாமி, அவரது மனைவி சுசீலா, மகன் ஐ.பி.செந்​தில்​கு​மார் எம்​எல்ஏ, மற்​றொரு மகன் ஐ.பி.பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்​தனர். இந்த வழக்கை விசா​ரித்த திண்​டுக்​கல் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதி​மன்​றம், அவர்​கள் 4 பேரை​யும் விடு​வித்து உத்​தர​விட்​டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் திண்​டுக்​கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை தரப்​பில் கடந்த 2018-ம் ஆண்டு மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இதை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், அமைச்​சர் உள்​ளிட்ட 4 பேரை​யும் விடு​வித்து திண்​டுக்​கல் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​தது. மேலும், இந்த வழக்​கில் மீண்​டும் குற்​றச்​சாட்டு பதிவு செய்து தினந்​தோறும் என்ற அடிப்​படை​யில் விசா​ரணை நடத்​தி, வழக்கை 6 மாதத்​தில் முடிக்​கு​மாறு, எம்​.பி. எம்​எல்​ஏக்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் திண்​டுக்​கல் மாவட்ட சிறப்பு நீதி​மன்​றத்​துக்கு உத்​தர​விட்​டது.

உயர் நீதி​மன்​றத்​தின் இந்த உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் அமைச்​சர் ஐ.பெரிய​சாமி சார்​பில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. அதில் கூறப்​பட்​டிருந்​த​தாவது: அரசி​யல் ரீதி​யாக பழி​வாங்​கும் நோக்​கில் வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. லஞ்ச ஒழிப்​புத் துறை ஆவணங்​களில் சொத்​துக் குவிப்பு புகாரை நிரூபிப்​ப​தற்​கான முகாந்​திரம் இல்​லை.

மனு​தா​ரர் மற்​றும் குடும்​பத்​தினரின் வரு​வாய் தவறாக கணக்​கிடப்​பட்டு இருப்​பதை பரிசீலித்​து​தான் சிறப்பு நீதி​மன்​றம் அனை​வரை​யும் விடு​வித்​தது. அந்த உத்​தரவை உயர் நீதி​மன்​றம் ரத்து செய்​தது ஏற்​புடையது அல்ல. மனு​தா​ரருக்கு எதி​ராக வழக்கு பதிவு செய்ய ஆளுநருக்கு பதிலாக, சட்​டப்​பேர​வைத் தலை​வரிடம் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் அனு​மதி பெற்​றதும் சரி​யான நடை​முறை அல்ல. எனவே, வழக்கை 6 மாதங்​களில் விசா​ரித்து முடிக்க வேண்​டும் என்ற உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு இடைக்​காலத் தடை விதிக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டிருந்​தது.

உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் தீபாங்​கர் தத்​தா, அகஸ்​டின் ஜார்ஜ் மாசி அமர்​வில் இந்த மேல்​முறை​யீட்டு மனு மீதான விசா​ரணை நடந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர்​கள் வி.கிரி. முத்​துகணேச பாண்​டியன், மாளவிகா ஜெயந்த் ஆகியோர் ஆஜராகி வாதிட்​டனர்.இதையடுத்​து, மறு​வி​சா​ரணை தொடர்​பான சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு நீதிப​தி​கள் இடைக்​காலத் தடை விதித்​தனர். இந்த வழக்​கில் தமிழக அரசு பதில் அளிக்​க​வும் உத்​தர​விட்​டனர். ஏற்​கெனவே வீட்டு மனை ஒதுக்​கீடு தொடர்​பாக ஐ.பெரிய​சாமி தொடர்ந்த மேல்​முறை​யீ்ட்டு மனுவுடன், இந்த வழக்​கை​யும் சேர்த்து விசா​ரணையை தள்​ளி

வைத்​தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *