அமைச்சர் ஐ.பெரியசாமி, மகன், மகளின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை – முழு விவரம் | ED raids homes of Minister I Periyasamy, son and daughter

1373305
Spread the love

சென்னை/ திண்டுக்கல்: தமிழக ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சர் ஐ.பெரிய​சாமி, அவரது மகன், மகளின் வீடு​கள், அவர்​களது குடும்​பத்​தினருக்கு சொந்​த​மான ஜவுளி மில் உட்பட திண்டுக்கல், சென்னையில் 6 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.

தமிழக ஊரக வளர்ச்​சித் துறை அமைச்​சரும், திமுக துணை பொதுச் செய​லா​ள​ரு​மான ஐ.பெரிய​சாமி​யின் வீடு திண்​டுக்​கல் மேற்கு கோவிந்​தாபுரம் துரை​ராஜ் நகரில் உள்​ளது. அவரது வீட்​டுக்கு அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று காலை 7.15 மணி அளவில் வந்​தனர். அப்​போது, அமைச்​சர் பெரிய​சாமி, வீட்​டில் இருந்​தார். துப்​பாக்கி ஏந்​திய சிஆர்​பிஎஃப் போலீ​ஸார், வீட்​டின் வெளியே பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்ட நிலை​யில், அமலாக்​கத் துறை அதி​காரி​கள், வீட்​டுக்​குள் நுழைந்து தீவிர சோதனை நடத்​தினர்.

திண்​டுக்​கல் சீலப்​பாடி​யில் அமைச்​சர் பெரிய​சாமி​யின் மகனும், பழநி தொகுதி திமுக எம்​எல்​ஏவு​மான ஐ.பி.செந்​தில்​கு​மார் வீடு மற்​றும் திண்​டுக்​கல் வள்​ளலார் நகரில் அமைச்​சரின் மகள் இந்​தி​ராணி​யின் வீடு ஆகிய இடங்​களி​லும் அமலாக்​கத் துறையினர் சோதனை நடத்தினர். இதுபற்றிய தகவல் அறிந்​து, அமைச்​சர் மற்​றும் அவரது மகன், மகள் வீடு​கள் முன்பு திமுக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் ஏராள​மானோர் திரண்​டனர்.

அமைச்​சரின் வீடு அருகே தர்​ணா​விலும் ஈடு​பட்​டனர். அப்போது, ஆத்​தூர் தொகுதி மேலக்​கோட்​டையை சேர்ந்த திமுக தொண்​டர் சரவணன் திடீரென தன் மீது பெட்​ரோலை ஊற்​றி தீக்குளிக்க முயன்​றார். கட்​சி​யினர் தடுத்து அவரை காப்​பாற்​றினர். இதனால், பரபரப்​பான சூழல் ஏற்​பட்​ட​தால், கூடு​தலாக சிஆர்​பிஎஃப் போலீ​ஸார் வரவழைக்​கப்​பட்டு பாது​காப்பு அதி​கரிக்​கப்​பட்​டது. திண்​டுக்​கல் – வத்​தலக்​குண்டு சாலை​யில் உள்ள ஒட்​டுப்​பட்டியில் அமைச்​சர் பெரிய​சாமி​ குடும்​பத்​தினருக்கு சொந்​த​மான இருளப்பா ஜவுளி மில்​லிலும் சோதனை நடத்​தப்பட்டது.

பூட்டை உடைத்து சோதனை: சென்னை அடையாறு பசுமைவழிச் சாலை​யில் உள்ள அமைச்​சர் பெரிய​சாமி​யின் வீட்​டில் ஒவ்​வொரு அறை​யாக அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். அப்​போது, பூட்​டி​யிருந்த அறையை திறக்​கு​மாறு, வீட்டு பணி​யாளர்​களிடம் கூறினர். சாவி இல்லை என்று அவர்கள் கூறி​யுள்​ளனர். இதையடுத்​து, வீட்டு பணி​யாளர்​கள் முன்​னிலை​யில் அந்த அறை​யின் பூட்டை உடைத்து அதி​காரி​கள் சோதனை​யில் ஈடு​பட்​டனர். சென்னை சேப்​பாக்​கத்​தில் உள்ள எம்​எல்ஏ விடு​தி​யில், அமைச்​சரின் மகனான ஐ.பி.செந்​தில்​கு​மார் எம்​எல்​ஏ வுக்கு ஒதுக்​கப்​பட்ட விடுதி அறை​யிலும் சோதனை நடத்​தப்​பட்​டது.

அனைத்து இடங்​களி​லும் காலை 7 மணி அளவில் தொடங்​கிய சோதனை 11 மணி நேரம் கடந்த நிலை​யில், மாலை 6.30 மணி அளவில் முடிந்​தது. திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் சோதனையை முடித்​துக்​கொண்​டு, அதி​காரி​கள் வெளி​யேறியதும், அமைச்​சர் பெரிய​சாமி வெளியே வந்​து, கூடி​யிருந்த நிர்​வாகி​கள், தொண்​டர்​களை சந்​தித்​தார். பின்​னர், அனை​வரும் கலைந்து சென்​றனர்.

கடந்த 2006-2011 திமுக ஆட்​சி​யில வீட்​டு​வசதி துறை அமைச்​ச​ராக ஐ.பெரிய​சாமி இருந்தபோது, முன்​னாள் காவல் அதிகாரி ஜாபர்​சேட் மனை​விக்கு வீட்​டு ​வசதி துறை சார்​பில் முறை​கே​டாக இடம் ஒதுக்​கிய​தாக புகார் எழுந்​தது. இது குறித்து லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்கு தொடர்ந்​தது. இதில் சட்​ட விரோத பணப்பரி​மாற்​றம் நடந்​ததா என்று அமலாக்கத் துறை விசா​ரணை நடத்தி வருகிறது. அதுதொடர்​பான ஆவணங்கள், ஆதா​ரங்​களை சேகரிக்க இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்​டனம் தெரி​வித்​த திமுக அமைப்​புச் செய​லா​ளர் ஆர்​.எஸ்​.பார​தி,‘இ.டி.க்​கும் அஞ்​ச​மாட்​டோம், மோடிக்​கும் அஞ்​ச​மாட்​டோம்​, சட்​டப்​படி எதிர்​கொள்​வோம்​’ என்​று தெரி​வித்​துள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *