ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழுவினருடன் ஒரு வாரம் அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு கடந்த மார்ச் 1-ஆம் தேதி வந்தடைந்தார்.
அவர் மார்ச் 8 வரை இங்கு தங்கியிருந்து இருநாடுகளுக்கிடையே உள்கட்டமைப்பு, வர்த்தகம், பசுமை எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் உறவை மேம்படுத்துவதற்காக பல்வேறு கட்ட ஆலோசனைகளை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் மேற்கொள்ளவுள்ளார்.