அமைச்சர் துரைமுருகனின் பேச்சு வருத்தத்தையும் வேதனையையும் தருகிறது: செல்வப்பெருந்தகை கருத்து  | Selvaperunthagai about duraimurugan

Spread the love

சென்னை: செம்​பரம்​பாக்​கம் ஏரி திறப்பு விவ​காரத்​தில் தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை​ தெரி​வித்த கருத்​துகள் வருத்​தமளிப்​ப​தாக அமைச்​சர் துரை​முரு​கன் கூறி​யிருந்​தார். இதற்கு பதிலளித்த செல்​வப்​பெருந்​தகை அமைச்​சரின் பேச்​சு​தான் தனக்கு வருத்​தமும் வேதனையும் அளிப்​ப​தாக தெரி​வித்​துள்​ளார்.

தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் சட்​ட​நாத கரை​யாளரின் 116-ம் ஆண்டு பிறந்​த​நாள் விழா, சென்​னை​யில் கட்சியின் தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. நிகழ்​வுக்கு பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் செல்​வப்​பெருந்​தகை கூறிய​தாவது: செம்​பரம்​பாக்​கம் ஏரியை என்​னைக் கேட்​டு​தான் திறக்க சொல்​லச் வேண்​டும் என்று நான் கூற​வில்​லை. மக்​கள் பிர​தி​நி​தி​யாக இருக்​கும் என்​னிடம் தகவல் சொல்லி இருக்​கலாம் என்​று தான்கேட்​கிறேன்.

அதி​காரி​களிடம் இதை கேட்​பதை குற்​றம் என்று சொல்​வ​தா, என் மீது குற்​றம் சுமத்த பார்க்​கிறார்​கள். மக்​கள் பிர​தி​நி​தி​யிடம் சொல்​வது விதி இல்லை என்று நீர்​வளத்​துறை அதி​காரி​கள் சொல்​கிறார்​கள். அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். அவர்களுக்கு தகவல் கூற முடி​யாது என்றால், எதற்கு மக்​கள் பிரதி​நிதி பதவி, நாளைக்கே வேண்டுமென்​றால் எம்எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்யட்​டு​மா, எங்​களுக்கு கேள்வி கேட்க உரிமை​ இல்லை​யா?

ஊராட்சி மன்​றத் தலைவர், திமுக ஒன்​றிய செய​லா​ளர், நகராட்​சித் தலை​வர், மாவட்​டக் கவுன்​சிலர், ஒன்​றிய கவுன்​சிலர் எல்​லோரும் பட்​டியல் இனத்​தவர்​கள். அவர்​கள் எல்​லோரை​யும் ஏன் அழைக்​க​வில்லை என்​றுதான்கேட்​கிறோம். அதி​காரிகளால் திமுக ஆட்​சி​யின் நற்​பெயருக்கு களங்​கம் வந்​து​விடக் கூடாது என்று நினைக்​கிறோம். அதி​காரி​கள் மீது இது​வரை நடவடிக்​கைகள் எடுக்​க​வில்​லை. அதி​காரி​கள் எதிர்​வினை ஆற்​று​வது எனக்கு வருத்​த​மாக உள்​ளது.

எங்​களுக்கு இருக்​கிறதே சுயமரி​யாதை மட்​டும்​தான். மூத்த அமைச்​சர் துரை​முரு​கன் நான் பேசி​யது வருத்​த​மாக இருக்​கிறது என்று சொல்​கிறார். அவர் இப்​படி பேசி​யது எனக்கு வருத்​த​மாக​வும், வேதனை​யாக​வும் உள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்ட ஆட்​சி​யர், நான் போன் செய்​தால் எடுப்​ப​தில்​லை. அவரிடம் பேசி 6 மாதங்​கள் ஆகிறது. தொகுதி பிரச்​சினை தொடர்​பாக அமைச்​சரிடம்​தான் பேசி வரு​கிறேன்​. இவ்​வாறு கூறி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *