சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு சனிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெறும் நிலையில், 19 சுற்று வாக்குகள் எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் அ.சிவா 65,199 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
இதையடுத்து திமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
திமுக மூத்த தலைவர்கள் பலரும் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.