சென்னை: உடல்நலக் குறைவால், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சர்களில் அதிக அரசியல் அனுபவம் கொண்டவராகவும், எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு நகைச்சுவையாகவும் அதேவேளையில் அதிரடியாக பதிலடி கொடுப்பதில் மூத்தவரான அமைச்சர் துரைமுருகன் (86) காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சளி மற்றும் காய்ச்சல் தொந்தரவால், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் மற்றும் சளித் தொல்லையால் அனுமதிக்கப்பட்ட துரைமுருகனுக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.