அமைச்சர் ரகுபதிக்கு உடல்நலக் குறைவு: தனியார் மருத்துவமனையில் அனுமதி | Minister regupathy s health deteriorates admitted to private hospital

1348375.jpg
Spread the love

திருச்சி: உடல்நலக்குறைவு காரணமாக தமிழக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர், அங்கிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில், அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர் இயல்பு நிலைக்குத் திரும்பி, மருத்துவமனையில் ஓய்வில் உள்ளார். தகவலறிந்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று பிற்பகல் அமைச்சர் ரகுபதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *