அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சேதப்படுத்தப்பட்ட நடைபாதை! இவர்களை என்ன செய்யலாம்?

Dinamani2f2024 10 162fcs4wt20u2fe1ca14c4 F9d8 4690 Bca4 Aaa8d2d3dbca.jpg
Spread the love

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இந்த பெரு மழைக்காலத்தில் நடைபாதையில் தோண்டப்பட்ட பள்ளத்தை அப்படியே சீர்செய்யாமல் விட்டுச் சென்றிருக்கின்றனர் சம்பந்தப்பட்ட கேபிள் நிறுவனத்தினர்.

இரண்டாவது பிரதான சாலையில், ஏதோ வேலை செய்த கேபிள் நிறுவனத்தினர், கற்களை மூடாமல் பள்ளத்தை அப்படியே விட்டுச் சென்றிருக்கின்றனர்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து கொண்டிருக்கும் சூழலில், பார்வையற்றோர், முதியவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றனர்.

சாலையில் மழைத் தண்ணீர் பெருகியோடும் நிலையில், மக்கள் அனைவரும் நடைபாதையில்தான் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த நிலையில், நடைபாதையைத் தோண்டிப்போட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் என எண்ணற்ற நிறுவனங்கள் செயல்படும் அம்பத்தூர் தொழிற்பேட்டைப் பகுதிக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே இரண்டாவது பிரதான சாலையில் உள்ள நடைபாதையில் போடப்பட்டுள்ள கற்கள் இரண்டு நாள்களுக்கு முன்னதாக கேபிள் பதிப்பதற்காக அகற்றப்பட்டன.

ஆனால், முறையாக வேலையை முடிக்காமல் இந்த மழைக்காலத்தில் கேபிள்கள் வெளியே தெரியும் வகையில், கற்களை மீண்டும் மூடாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளது கேபிள் நிறுவனம்.

Ambattur IE
அம்பத்தூர் தொழிற்பேட்டை இரண்டாவது பிரதான சாலையில் சேதப்படுத்தப்பட்ட நடைபாதை.

தவிர, இதே சாலையின் இதே நடைபாதையில் நெடுகிலும் மழை நீர் வடிவதற்காக உள்ள வடிகால் பள்ளங்களின் மூடிகளும் உருக்குலைந்து, வாய் திறந்து கிடக்கின்றன. சற்று கவனிக்காவிட்டாலும் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் உள்ளே தடுமாறி விழுந்து காயமுற நேரிடலாம். மழை மேலும் தொடரும் நிலையில், இதுபோன்ற பள்ளங்கள் மிகவும் கவனம் செலுத்தப்பட வேண்டியவை என்பது குறிப்பிடத் தக்கது. கவனிப்பார்களா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *