அம்மா, இது நள்ளிரவு 12.08..! செய்தியாளரின் அம்மாவிடம் பேசிய லக்னௌ பயிற்சியாளர்!

Dinamani2f2025 04 052fdrpz4q0w2flanger.jpg
Spread the love

நேற்றிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் லக்னௌ அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கலந்துகொண்டார்.

அந்தச் சந்திப்பின்போது, வாய்ஸ் – ரெக்கார்ட் செய்ய வைக்கப்பட்ட செய்தியாளர் ஒருவரின் மொபைல் போனில் இருந்து அம்மா என்ற எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

”யாருடைய அம்மா?” என சம்பந்தப்பட்ட செய்தியாளரிடம் அனுமதிக் கேட்டுக்கொண்டு அந்த அழைப்பினை எடுத்தார் ஜஸ்டின் லாங்கர்.

அழைப்பை எடுத்த ஜஸ்டின் லாங்கர், “அம்மா, இது நள்ளிரவு 12.08. நான் செய்தியாளர் சந்திப்பில் இருக்கிறேன்” எனக் கூறி வைத்துவிட்டார்.

இது அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தது. பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

சமூக வலைதளங்களில் இந்த விடியோ வைரலாகி வருகிறது. பலரும் அம்மா என்றால் இப்படித்தான் என நெகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜஸ்டின் லாங்கர் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்டர். இவரது பயிற்சியில் 2021 டி20 உலகக் கோப்பையை ஆஸி. வென்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது, 2023இல் இருந்து லக்னௌ அணியில் பயிற்சியாளராக இருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *