அயலி இணையத் தொடர் நாயகியின் புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அயலி இணையத் தொடரில் தமிழ்ச்செல்வி பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை அபி நட்சத்திரா.
பெரிய திரையில் பீட்சா 3, தர்மதுரை, மூக்குத்தி அம்மன், நெஞ்சுக்கு நீதி, ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் அபி நட்சத்திரா.
இதையும் படிக்க:
தற்போது அபி நட்சத்திரா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள அன்னம் என்ற தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் -2 தொடரில் நாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பரத்குமார் நடிக்கிறார்.
மேலும், இத்தொடரில் மனோகர், கார்த்திக், ராஜலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மாமன் மகனை காதலிக்கும் அத்தை மகளாக அபி நட்சத்திரா, அன்னம் பாத்திரத்தில் நடிப்பதாக முன்னோட்டக் காட்சி மூலம் தெரிகிறது.
இந்த நிலையில், சுந்தரி தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைவதால், வரும் டிச. 2 ஆம் தேதி முதல் இரவு 7 மணிக்கு அன்னம் தொடர் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.