பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக அடுத்த மாதம் (ஜுன்) 1 ந்தேதி வரை நடைபெற உள்ளது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்து உள்ள நிலையில் 3 வது கட்ட தேர்தல் வருகிற 7 ந்தேதி 12 மாநிலங்களில் 94 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைந்து உள்ளன.
சூடுபிடித்த தேர்தல் களம்
இந்த நிலையில் மற்ற மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டி உள்ளது.
காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினர் மற்றும அதன் கூட்டணி கட்சியினர் பிரசாரவியூகத்தை மாற்றி போட்டி போட்டி குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது.
பிரதமர்மோடி
இதற்கிடையே பிரதமர்மோடி இன்று அயோத்தி வந்தார். அவர் ராமர் கோவிலில் பாலராமரை வழிபட்டு பிரார்த்தனை செய்தார். சிறப்பு வழிபாடும் நடத்தினார். இதைத்தொடர்ந்த பிரதமர் மோடி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார்.
இதில் சாலையின் இருபுறமும் கட்சி தொண்டர்கள் மற்றும்பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு நின்று மலர் தூவி மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்வு அளித்தனர். ரோடு ஷோ சுக்ரிவா கோட்டை முதல் லடா சவுக் வரை நடைபெற்றது.
முன்னதாக அயோத்திக்கு வந்த பிரதமர்மோடியை உத்தரபிரதேச மாநில முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். வருகிற 20 ந்தேதி நடைபெறும 5 ம்கட்ட தேர்தலில் அயோத்தி தொகுதிக்கும், ஜுன் 1ந்தேதி நடைபெறும் 7 ம் கட்ட தேர்தலில் பிரதமர் மோடி
போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர்மோடி கடந்த 4 மாதங்களில் 2 வது முறையாக அயோத்தி ராமர்கோவிலில் வழிவாடு நடத்தி இருக்கிறார்.