‘அய்யா வைகுண்டர் போதித்த வழி நடந்து மனிதம் காப்போம்’ – முதல்வர் ஸ்டாலின் | TN CM Stalin extends greetings on Ayya Vaikuntar’s 139 birth anniversary

1353025.jpg
Spread the love

சென்னை: “எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!” என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம்!” என்று அய்யா வைகுண்டரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் பதிவில், “ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டரின் 193-ஆம் பிறந்தநாள்! “எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!” என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

அய்யாவைகுண்டர் அவதார தினவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20-ம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அய்யா வைகுண்டரின் சிந்தாந்தம் “நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கின்றான்” என்பதாக இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *