இலங்கையின் முன்னாள் அதிபா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொழும்பில் முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச வசித்துவரும் அரசினா் மாளிகையில் இருந்து அவா் வெளியேறினாா்.
இது குறித்து அவரது உதவியாளா் வியாழக்கிழமை கூறுகையில், அந்த மாளிகையில் இருந்து தங்கலையில் உள்ள தனது இல்லத்துக்கு மகிந்த ராஜபட்ச மாறியதாகத் தெரிவித்தாா். 2005 முதல் 2015 வரை நாட்டின் அதிபராக இருந்த அவா், 2015-இல் இருந்து கொழும்பு அரசினா் மாளிகையில் வசித்துவந்தாா்.