நடிகர்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த நடிகை, அரசின் ஆதரவு இல்லாததால் புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலையாள திரையுலகின் பல்வேறு நடிகா்கள், இயக்குநா்கள் மீது பாலியல் வழக்குகள் பதிவாகின. வடக்கன்சேரி, மாராடு ஆகிய இரு காவல் நிலையங்களில் ஆளுங்கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எம்எல்ஏ முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் 376-ஆவது பிரிவின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில், முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்த நடிகை ஒருவர், அந்த புகாரைத் திரும்பப் பெறுவதாகக் கூறியுள்ளார். அரசின் ஆதரவு தனக்கு இல்லாததே, இந்த வழக்கில் இருந்து பின்வாங்குவதற்கான காரணம் என்று புகாரளித்த நடிகை விவரித்துள்ளார்.