அரசியலில் கூட்டணி வைப்பதற்கான ஒரு மேட்ரிமோனி! A matrimony for political alliances!

Spread the love

5. ட்ரெண்டிங் புதுக்கட்சி

ராசி: சோஷியல் மீடியா ராசி

நட்சத்திரம்: யூடியூப் நட்சத்திரம்

தற்போதைய நிலை: சிஸ்டத்தை மாற்றுவதற்காக சினிமா/பிசினஸை விட்டுவிட்டு சமீபத்தில்தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன்.

வரன் எதிர்பார்ப்பு: இந்த மேட்ரிமோனியில் என்னை யார் திருமணம் செய்து கொண்டாலும், நான் தான் முதல்வர் வேட்பாளர்! நீங்கள் அனைவரும் எனக்குப் பின்னால் நின்று கைதட்ட வேண்டும்.

முக்கிய நிபந்தனை: எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உங்களுக்கும் ஆக்டிவான ஐடி விங் இருக்க வேண்டும். ஒருவேளை என் கண்டிஷனுக்குப் பயந்து யாரும் வரவில்லை என்றால், “நான் தனிமரம் இல்லை, மக்கள் என் பக்கம்” என்று சொல்லி சிங்கிளாகவே களமிறங்கி விடுவேன்!

இந்தக் கூட்டணி மேட்ரிமோனியில் மணமகன் (ஆளும் கட்சி), மணமகள் (எதிர்க்கட்சி) என யாராக இருந்தாலும், மொய் எழுதப் போவது (வாக்களிக்கப் போவது) என்னவோ பொதுமக்களாகிய நாம்தான்! எனவே, மேட்ரிமோனி புரொஃபைல்களைப் பார்த்து ஏமாறாமல், நிஜமான நல்ல வரனை (வேட்பாளரை) தேர்ந்தெடுப்பது நம் கையில்தான் உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *