“அரசியல் கட்சியின் தரவுகளைச் சேகரிப்பது அமலாக்கத்துறையின் கடமையா?”- மம்தா| “Is it the duty of the Enforcement Directorate to collect data of a political party?” — Mamata Banerjee

Spread the love

அரசியல் ஆலோசனை & தேர்தல் யுக்திகளை வகுக்கும் நிறுவனமான ‘ஐ-பேக்’ I-PAC கொல்கத்தா அலுவலகம் மற்றும் அதன் இணை நிறுவனர் பிரதிக் ஜெயினின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை இன்று (ஜன. 8) சோதனை நடத்தியிருக்கின்றனர்.

‘ஐ-பேக்’ நிறுவனத்தின் இயக்குநரான பிரதிக் ஜெயின், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவராகவும் இருக்கிறார். இந்த நிறுவனம் தான் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கிறது.

ஆவணங்களைக் கைப்பற்றிய மம்தா

ஆவணங்களைக் கைப்பற்றிய மம்தா

ஆவணங்களைக் கைப்பற்றிய மம்தா?

இந்த சோதனையின் போது தர்ணாவில் ஈடுபட்டிருந்த மம்தா பானர்ஜி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருக்கும்போதே பிரதிக் ஜெயினின் வீட்டுக்குச் சென்று சில ஆவணங்களை கைப்பற்றியிருக்கிறார் என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மம்தா பானர்ஜி, ‘‘அமலாக்கத் துறையினரின் இந்த சோதனை நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது.

அவர்கள் எங்கள் கட்சியின் ஆவணங்களையும் சட்டமன்றத் தேர்தலுக்கான எங்கள் வேட்பாளர்களைப் பற்றிய விவரங்களையும் கொண்ட ஹார்ட் டிஸ்குகளை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *