அரசியல் கட்சி அலுவலகங்களில் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை | Leaders hoist the national flag at political party offices and pay respect

1373225
Spread the love

சென்னை: சுதந்​திர தினத்தை முன்​னிட்டு அரசி​யல் கட்சி அலு​வல​கங்​களில் நடை​பெற்ற விழாக்​களில் அரசி​யல் தலை​வர்​கள் பங்​கேற்று தேசிய கொடி ஏற்றி மரி​யாதை செலுத்​தினர். சுதந்​திர தினத்தையொட்டி தமிழக அரசு சார்​பில் நடை​பெற்ற விழா​வில் முதல்​வர் ஸ்டா​லின் தேசிய கொடியேற்றி மரி​யாதை செலுத்​தி​னார்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் சென்னை தியாக​ராய நகரில் உள்ள அதன் மாநில தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில், கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரி​யாதை செலுத்​தி​னார். கட்​சி​யின் செங்​கொடியை மத்​திய கட்​டுப்​பாட்​டுக்​குழு தலை​வர் ஜி.​ராமகிருஷ்ணன் ஏற்றி வைத்​தார்.

17553148362006
சென்னை, தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை

அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி மரியாதை

செலுத்திய அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்

கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

தமிழக பாஜக மாநில தலை​மையக​மான கமலால​யத்​தில் நடை​பெற்ற விழா​வில், மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தேசிய கொடி ஏற்றி வைத்து மரி​யாதை செலுத்​தி​னார். அப்​போது, போதை இல்லா தமிழகத்தை உரு​வாக்​கு​வோம் என உறு​தி​மொழி ஏற்​று, நிர்​வாகி​கள், தொண்டர்​களுக்கு இனிப்​பு​களை வழங்​கி​னார். இந்​நிகழ்ச்​சி​யில் மாநில முன்​னாள் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன், மாநில துணைத் தலை​வர்​கள் கரு.நாக​ராஜன், நடிகை குஷ்பு, மாநில செய​லா​ளர் அமர் பிர​சாத் ரெட்டி உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்.

17553149342006
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா தலைமை

அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி

இனிப்பு வழங்கிய ஜி.கே.வாசன்.

தமாகா சார்​பில் ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள கட்சி அலு​வல​கத்​தில் நடை​பெற்ற விழா​வில், கட்​சி​யின் தலை​வர் ஜி.கே.​வாசன் பங்​கேற்று கொடியை ஏற்றி, அனை​வருக்​கும் இனிப்பு வழங்​கி​னார்.

மக்​கள் நீதி மய்​யம் கட்சி சார்பில், சென்​னையில் உள்ள தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற விழா​வில் கட்​சி​யின் துணைத்​தலை​வர் ஏ.ஜி.மவுரியா பங்​கேற்​று, தேசிய கொடி ஏற்​றி ​வைத்​து, அனை​வருக்​கும் இனிப்பு வழங்​கி, குழந்​தைகளுக்கு நோட்டு புத்​தகங்​களை வழங்​கி​னார்.

17553148972006
தேமுதிக சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில்

தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கிய கட்சியின்

பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

தேமு​திக சார்​பில், கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த், நாமக்​கல்​லில் நடை​பெற்ற சுதந்​திர தின விழா​வில் பங்​கேற்​று, தேசிய கொடியேற்றி இனிப்​பு​கள் வழங்​கி​னார். இந்​நிகழ்ச்​சி​யில் கட்​சி​யின் பொருளாளர் எல்​.கே.சுதீஷ் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். பெருந்​தலை​வர் மக்​கள் கட்சி தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், கட்​சி​யின் தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன் தேசியக் கொடியை ஏற்​றி, இனிப்​பு​கள் வழங்​கி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *