கேரள மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 57 ஆக உயர்ந்த கேரள அரசு ஆலோசித்து வருகிறது.
பல்வேறு அரசுப்பங்குதாரர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், புதிய நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் பிப்ரவரியில் மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தாக்கல் செய்யப்படும்போது அறிவிப்பு வெளியிடப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசு ஊழியர்கள் 56 வயதில் ஓய்வுபெறும் ஒரே மாநிலம் கேரளம். உம்மன் சாண்டி ஆட்சிக் காலத்தில்(2011-16) அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, வரன்முறைப்படுத்த ஓய்வு பெறும் வயதை 55 யிலிருந்து 56 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
2025 ஆம் ஆண்டின் பிற்பாதியில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2026 ஏப்ரலில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசின் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.