அரசு பேருந்துகளில் முன்பதிவு பயணம்; 3 பயணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு | Rs.10 thousand each as prize for 3 passengers

1335679.jpg
Spread the love

சென்னை: அரசு பேருந்துகளில் கடந்த மாதம் முன்பதிவு செய்து பயணம் செய்த 3 பயணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், 10 பேருக்கு தலா ரூ.2 ஆயிரமும் பரிசு வழங்கப்படவுள்ளது. இதற்காக கணினி குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொலைதூர பேருந்துகளில் https://www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் TNSTC செயலி மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் முறை உள்ளது.

இந்நிலையில் வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் முன்பதிவு செய்யும் 3 பயணிகள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே இத்திட்டத்தின் மூலம் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயனடையும் வகையில் கடந்த ஜூன் மாதம் முதல் 13 பயணிகளை தேர்வு செய்து, முதல் 3 பயணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், மற்ற 10 பயணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி கடந்த அக்டோபர் மாதத்துக்கான முன்பதிவு செய்த பயணிகளில் இருந்து கணினி குலுக்கல் முறையில் 13 பயணிகளை போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திர ரெட்டி நேற்று தேர்வு செய்தார்.

அதன்படி பயணாளிகள் உமா மகேஸ்வரி, ஸ்ரீசுதீஸ்ண ராம், சேதுராமன் ஆகியோர் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பயணிகள் ரூ.2 ஆயிரம் பரிசுத்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *