அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஊக்கத் தொகையுடன் தொழிற்பயிற்சி பெறுவதற்கு அக்.18 வரை விண்ணப்பிக்கலாம் | Vocational training with incentives in govt transport corporations

1379601
Spread the love

சென்னை: போக்​கு​வரத்​துக் கழகங்​களில் ஊக்​கத் தொகை​யுடன் வழங்​கப்​படும் தொழிற்​ப​யிற்​சி​யில் பங்​கேற்க அக்​.18-ம் தேதிக்குள் விண்​ணப்​பிக்​கலாம் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக வெளி​யிடப்​பட்ட அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அரசு போக்​கு​வரத்​துக் கழகங்​களின் விழுப்​புரம், கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, எம்​டிசி, எஸ்​இடிசி ஆகிய மண்​டலங்​களில் தொழிற்​ப​யிற்சி பெற விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன. பொறி​யியல் பட்​டப்​ படிப்பு முடித்​தவர்​களுக்கு 458 காலி​யிடங்​களும், பட்​டயப் படிப்பு முடித்​தவர்​களுக்கு 561 காலி​யிடங்​களும், கலை, அறி​வியலில் பட்​டப் படிப்பு முடித்​தவர்​களுக்கு 569 காலி​யிடங்​களும் உள்​ளன.

ரூ.9 ஆயிரம் வரை ஊக்கத்தொகை: 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை பட்​டப் படிப்பை முடித்​தவர்​கள் இந்த பயிற்​சிக்கு விண்​ணப்​பிக்​கலாம். பயிற்​சிக் காலத்​தில் மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் ஊக்​கத் தொகை வழங்​கப்​படும்.

தேர்வு முறை​யில் இட ஒதுக்​கீடு வழங்​கப்​படும். மேலும், விவரங்​களை https://nats.education.gov.in/ என்ற இணை​யதளத்​தில் தெரிந்து கொள்​ளலாம். தகு​தி​யும் விருப்​ப​மும் உடைய​வர்​கள் அக்​.18-ம் தேதிக்​குள் மேற்​கூறிய இணை​யதளத்​தில் விண்​ணப்​பிக்​கலாம். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *