அரிப்புக்காக காது குடைந்தபோது செவிப்பறையில் ஓட்டை…கேட்கும் திறன் பாதிக்குமா? | A hole in the eardrum while scratching an itch in the ear… will it affect hearing ability?

Spread the love

காதுகளைக் குடைவதால், உள்ளே உள்ள சருமம் பாதிக்கப்படலாம். அப்படித்தான் உங்களுக்கு செவிப்பறையில் ஓட்டை விழுந்துள்ளது. இதை  “ட்ரமாட்டிக் பெர்ஃபோரேஷன்’ (Traumatic Perforation) என்று சொல்வோம். அதாவது  செவிப்பறையில் ஏற்பட்ட கிழிசல்.  இந்தப் பிரச்னையானது 99 சதவிகிதம், தானாகவே சரியாகிவிடக்கூடியது.

செவிப்பறையில் கிழிசல் ஏற்படும்போது, அங்கே ஒரு கட்டி போன்று உருவாகும்.  அந்தக் கட்டிதான், செவிப்பறையில் ஏற்பட்ட பாதிப்பு மெள்ள மெள்ள ஆறுவதற்கு உதவும்.  எனவே, இதில் தண்ணீர் படக்கூடாது. நீங்களாக சுய மருத்துவம் என்ற பெயரில் காதுகளுக்கான டிராப்ஸ் வாங்கிப் பயன்படுத்தக்கூடாது. முதல் வேலையாக நீங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டும். மருத்துவர் உங்களைப் பரிசோதித்துவிட்டு, காயம் ஆறுவதற்கான மருந்துகளைக் கொடுப்பார்.  ஆன்டிபயாட்டிக் மருந்துகள், சளி பிடிக்காமலிருப்பதற்கான மருந்துகள், சில வைட்டமின்கள் போன்றவற்றைப் பரிந்துரைப்பார். 

 'ஆட்டோஎண்டோஸ்கோப்பி' (Otoendoscopy) பரிசோதனையை மேற்கொள்வார். ஐந்துநாள்களில் ஒருமுறை, பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ஒருமுறை என குறிப்பிட்ட இடைவெளிகளில் அந்தப் பரிசோதனையை மேற்கொள்வார்.

‘ஆட்டோஎண்டோஸ்கோப்பி’ (Otoendoscopy) பரிசோதனையை மேற்கொள்வார். ஐந்துநாள்களில் ஒருமுறை, பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ஒருமுறை என குறிப்பிட்ட இடைவெளிகளில் அந்தப் பரிசோதனையை மேற்கொள்வார்.
Photographer: Dragos Condrea

 ‘ஆட்டோஎண்டோஸ்கோப்பி’ (Otoendoscopy) பரிசோதனையை மேற்கொள்வார். ஐந்து நாள்களில், பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ஒருமுறை என குறிப்பிட்ட இடைவெளிகளில் அந்தப் பரிசோதனையை மேற்கொள்வார்.

செவிப்பறையானது முற்றிலுமாக ஆறிவிட்டதா என்பதை உறுதிசெய்யும்வரை இந்தச் சோதனை தேவைப்படும்.  ஏற்கெனவே சொன்னது போல, 99 சதவிகிதம் இது சரியாகிவிடும். ஒருவேளை அப்படிச் சரியாகாத பட்சத்தில், செவிப்பறையைப் பழுதுபார்க்கும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.  காதின் பகுதியை வெட்ட வேண்டிய அவசியமின்றி, எண்டோஸ்கோப்பி முறையிலேயே இந்தச் சிகிச்சையைச் செய்துவிட முடியும். அரிதாக சிலருக்கு காதின் பின்பக்கத்தில் வெட்டி, இந்தப் பழுதுபார்க்கும் சிகிச்சை மேற்கொள்ளப்படும். 

பொதுவாக, இதுபோன்ற பிரச்னைகளில் கேட்கும் திறன் பாதிக்கப்படாது. ஒருவேளை அதில் சிரமங்களை உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ஆடியோகிராம் பரிசோதனையும் செய்து, கேட்கும் திறனில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்று மருத்துவர் செக் செய்வார். அதற்கேற்ப சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *