பாராளுமன்ற தேர்தலில் நடைபெற்ற 7 கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் முடிந்தது. பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
இதில், சிக்கிம், அருணாச்சல் சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் இன்று (ஜூன் 2-ம் தேதி) முடிவுக்கு வருவதால் இன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பபட்டது.
அருணாசல பிரதேசம்
அருணாச்சல பிரதேசத்தில் சட்டசபை தொகுதிகள் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. இதில் குறைந்தபட்சம் 31 தொகுதிகளில் வெல்லும் கட்சியை ஆட்சியைப் பிடிக்கும். ஏற்கனவே 60 தொகுதிகளில் 10 இடங்களில் பா.ஜ.க.போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டது. இந்த 10 தொகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் கடைசி நிமிடத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் பா.ஜ.க.10 தொகுதிகளில் போட்டியின்றி வென்றது.
இதனால் அருணாசலபிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 19ந்தேதி 50 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடந்தது.
வாக்கு எண்ணிக்கை
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜனதா அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று இருந்தது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 46 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்து உள்ளது.
தேர்தலில் அங்குள்ள என்பிபி கட்சி 5 இடங்களைக் கைப்பற்றி உள்ளன. சுயேட்சைகள் 3 பேர் வெற்றி பெற்று உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்று உள்ளது.அங்குள்ள பாமெங்க் தொகுதியில் குமார் வால் வெற்றி பெற்று உள்ளார். அவர் 635 வாக்குகள்பெற்று வெற்றி பெற்று இருக்கிறார். குமார்வால் மொத்தம் 6554 ஓட்டுகள்பெற்று இருந்தார்.
அங்குள்ள நேஷசனல் காங்கிரஸ் பார்ட்டி 3 தொகுதியிலும், பியூபில் பார்ட்டி அருணாசலபிரதேசம் கட்சி 2 இடத்திலும் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் அமைச்சர்
தேர்தல் வெற்றி குறித்து அருணாச்சல பிரதேச முதல் அமைச்சர்பெமா காண்டு தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையில் தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் மகத்தான மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.தேர்தல் அறிக்கையில் கூறியபடி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசு பாடுபடும் என்று மாநில மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
அருணாசல பிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் தொகுதிக்கான வாக்குஎண்ணிக்கை ஜூன் 4-ம் தேதிதான் நடைபெறும். இதேபோல் ஆந்திரா, ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளும் ஜூன் 4-ம் தேதி தான் வெளியாகும்.
சிக்கிம்
சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டசபை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில், பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை எண்ணப்பட்டன.
இதில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது.
சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி ஒரு தொகுதியைக் கைப்பற்றியது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
சிக்கிம் மாநிலத்தில் ஆட்சியமைக்க 17 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்து ஆட்சியையும் தக்க வைத்துள்ளது.
பிரதமர்மோடி
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. எங்கள் கட்சியனர் செய்த தேர்தல் பணி முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். சிக்கிமின் வளர்ச்சி மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் எங்கள் கட்சி எப்போதும் முதலாவதாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.
இதையும் படியுங்கள்: பாராளுமன்ற தேர்தலல் கருத்து கணிப்பில் பா.ஜனதாவுக்கு வாய்ப்பு