இன்று(ஆக. 3) முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியபின் செய்தியாளர்களுடன் அதியமான் பேசியதாவது, “தமிழக அரசால் 2009-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உள்இடஒதுக்கீடு ‘செல்லும்’ என்கிற தீர்ப்பை அரசியல் சாசன அமர்வில் 7 பேர் கொண்ட நீதியரசர்கள் வழங்கியிருக்கிறார்கள். அந்த தீர்ப்பால் இங்கேயுள்ள ஒடுக்கப்பட்ட, அடித்தட்டில் இருக்கிற அருந்ததியர் பிரிவு மக்களுக்கு பெரிய வாய்ப்பை வழங்கப்பட்டிருக்கிறது.
அருந்ததியர் பிரிவுக்கான உள் இடஒதுக்கீட்டை 6% ஆக உயர்த்திட அரசுக்கு கோரிக்கை
