மேற்கிந்திய தீவுகள்
129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு நியூஸிலாந்து வீராங்கனை எடன் கார்சன் தொடக்கம் முதலே அழுத்தம் கொடுத்தார்.
கேப்டன் மேத்யூஸ் 15 ரன்களிலும், கியாரா 12 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேற விக்கெட் கீப்பர் கேம்பல் 3 ரன்களிலும், டெய்லர் 13 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.
ஒருகட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 63 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது.
டீன்ரா டோட்டின் மிரட்டல்
பந்து வீச்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி நியூஸிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்த டீன்ரா டோட்டின் பேட்டிங்கிலும் வந்து நியூஸிலாந்து அணிக்கு 3 சிக்ஸர் விளாசி மேலும் அதிர்ச்சியளித்தார். அவரது அதிரடியால் மேற்கிந்திய தீவுகள் அணி இலக்கை நோக்கி வேகமாக பயணித்தது.
டீன்ரா டோட்டின் 3 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். மேலும் டி20 கிரிக்கெட்டில் 33 சிக்ஸர்கள் விளாசிய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.