இதனைத் தொடர்ந்து விளையாட்டு துறையில் உயரிய விருதான அர்ஜுனா விருதை மத்திய அரசு துளசிமதிக்கு நேற்று (2.1.2025) அறிவித்திருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் விருது அறிவித்தது தொடர்பாக அவரைத் தொடர்புக்கொண்டு பேசினோம். “நான் “veterinary medicine’ 3 ஆம் ஆண்டு படிச்சிட்டு இருக்கேன். நேற்று க்ளாஸில் இருந்தேன். எப்போதும் 5 மணிக்குத்தான் முடியும்.
க்ளாஸில் ஃபோன் பயன்படுத்தக்கூடாது என்பதால் எனக்கு விருது அறிவித்தது எதுவும் தெரியாது. க்ளாஸ் முடிந்தப்பிறகு ஃபோனை எடுத்துப்பார்த்தேன். நிறைய அழைப்புகளும், வாழ்த்து மெசேஜ்களும் வந்திருந்தது. அதன்பிறகுதான் எனக்கு விருது அறிவித்தது தெரியவந்தது. உடனே அம்மா, அப்பா எல்லோருக்கும் ஃபோன் பண்ணி பேசினேன். விருது அறிவித்ததுல அவர்களுக்கும் ரொம்ப சந்தோஷம். எனக்கும் ரொம்ப சந்தோஷம்.