நம்மிடம் பேசிய ம.நீ.ம மாநில நிர்வாகிகள் சிலர், “முதலில் பிப்ரவரி 23-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த அறிவாலயம் செல்வதாக இருந்தோம். எத்தணை தொகுதிகள் கேட்பது, எந்தெந்த தொகுதிகள் கேட்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எங்கள் தலைவரிடம் ஆலோசனை பெற முடியவில்லை.

அடுத்ததாக பிப்ரவரி 28-ம் தேதி பேச்சுவார்த்தை நடக்கும் எனச் கட்சி மட்டத்தில் பேசப்பட்டது. ஆனால் அதையும் தள்ளிவைக்கப்பட்டதாக சொல்லிவிட்டார்கள்” என்றனர்.
தி.மு.க – ம.நீ.ம இடையே என்னதான் நடக்கிறது என விசாரித்தோம், அதுகுறித்துப் பேசும் தலைமைக்கு நெருக்கமானவர்கள் “எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில் எங்கள் தலைவர் கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகிய மூவரும்தான் தொகுதி குறித்து பேசுவார்கள்.