‘அறிவாலயம் வந்த காங்கிரஸ் குழு!’ – பரபரப்பில் திமுக – காங் கூட்டணி |“Congress Delegation Arrives at Anna Arivalayam!” – Buzz Around DMK–Congress Alliance Talks

Spread the love

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கிரிஷ் சோடங்கர், “விஜய் உட்பட எல்லா கட்சியிடமும் பேசுவோம்’ எனக் கூறியது மீண்டும் கூட்டணிக்குள் புயலை கிளப்பியது.

இந்நிலையில், இன்று (பிப்28) காங்கிரஸின் குழுவுக்கு திமுகவின் தொகுதி பங்கீடு குழுவிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை 11:05 மணிக்கு கிரிஷ் சோடங்கர் தலைமையில் செல்வப்பெருந்தகை, ராஜேஷ் குமார் போன்றோரை உள்ளடக்கிய காங்கிரஸ் குழு அறிவாலயத்துக்கு பேச்சுவார்த்தைக்காக வந்திருக்கிறது. காங்கிரஸ் எதிர்பார்ப்பது 39 சீட்டுகள் எனவும் குறைந்தபட்சம் 30 சீட்டுகளுக்குள்ளாவது முடிக்க நினைப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *