அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் குறித்து பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை | Electricity Board warns public about downed power lines

1380345
Spread the love

சென்னை: அறுந்து கிடக்​கும் மின்​கம்​பிகள் அரு​கில் செல்ல வேண்​டாம் என மக்களை மின்​வாரி​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. மழைக் காலங்​களில் பொது​மக்​கள் கடைபிடிக்க வேண்​டிய பாது​காப்பு நடை​முறை​கள் குறித்து மின்​வாரி​யம் வெளி​யிட்ட அறிக்​கை: ஈரமான கைகளால் மின்​சு​விட்​சுகள், மின்​சாதனங்​களை இயக்க முயற்​சிக்க வேண்​டாம், வீட்​டின் உள்​புறசுவர் ஈரமாக இருந்​தால் சுவிட்​சுகள் எதை​யும் இயக்​கக் கூடாது, ஈரப்​ப​த​மான சுவர்​களில் கை வைக்க கூடாது.

மேலும் நீரில் நனைந்த அல்​லது ஈரப்​ப​த​மான மின்​விசிறி, லைட் உட்பட எதை​யும் மின்​சா​ரம் வந்​தவுடன் இயக்க வேண்​டாம், மின்​கம்​பிகள் அறுந்து கிடக்​கும் பகு​தி​கள், மின்​சார கேபிள்​கள், மின்​சார கம்​பங்​கள், பில்​லர் பாக்ஸ் மற்​றும் டிரான்​ஸ்​பார்​மர்​கள் இருக்​கும் பகு​தி​களுக்கு அரு​கில் செல்​வது தவிர்க்க வேண்​டும்.

சாலைகளி​லும், தெருக்​களி​லும் மின்​கம்​பங்​கள் மற்​றும் மின்​சாதனங்​களுக்​கருகே தேங்​கிக்​கிடக்​கும் தண்​ணீரில் நடப்​பே​தா, ஓடு​வே​தா, விளை​யாடு​வதோ மற்​றும் வாக​னத்​தில் செல்​வேதா தவிர்க்​கப்பட வேண்​டும். மின்சேவை, மின்கம்பி அறுந்துவிழுதல், மின்​தடை குறித்த புகார்​களுக்கு உடனடி​யாக மின்​னகத்தை “94987 94987” தொடர்பு கொள்​ளு​மாறு பொது​மக்​கள் கேட்​டுக் கொள்ளப்படுகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *