அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை! – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு |Government jobs for Jallikattu players Chief Minister M.K. Stalin announcement

Spread the love

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.17) காலை தொடங்கியிருக்கிறது.

சிறந்த காளைக்கு டிராக்டர், சிறந்த மாடுபிடி வீரருக்கு கார், போட்டியில் பங்கேற்கும் அனைத்துக் காளைகளுக்கும் தங்கக் காசு பரிசுகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு விழாவை நேரில் சென்று பார்வையிட சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை சென்றார்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளைக் கண்டு ரசித்த மு.க. ஸ்டாலின், அதிக காளைகளை அடக்கிச் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் உரிய அரசுப் பணியிடங்களில் பணியமர்த்த வழிவகை செய்யப்படும் என அறிவித்திருக்கிறார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *