நீண்ட காலம் எடுத்துக்கொண்டிருக்கும் மருந்தின் செயல்பாட்டிற்கு உடல் பழகியிருக்கும். அதை திடீரென நிறுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
குறிப்பாக, ஸ்டீராய்டு போன்ற மருந்துகளை திடீரென நிறுத்தாமல், மருத்துவரின் ஆலோசனையின்படி மெதுவாக அளவை குறைத்து நிறுத்த வேண்டும்.
அதிகுருதியழுத்தம் அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருந்தை திடீரென நிறுத்தினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்… குருதியழுத்தம் அதிகரிக்கக்கூடும்.
இதனால் மயக்கம், டயபெட்டிக் கோமா, ஸ்ட்ரோக், மாரடைப்பு போன்ற ஆபத்தான நிலைகள் உருவாகலாம்.
மேலும் இருதய நோய்க்கான மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ளாததினால் அல்லது திடீரென நிறுத்துவதால் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

அலோபதி மற்றும் மாற்று மருந்துகளை ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டுமானால் மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம்.
பொதுவாக ஒரு மருந்தை உணவிற்கு முன்னும், மற்றொரு மருந்தை உணவிற்கு பின்னும் எடுத்துக்கொள்ளலாம். இல்லையேல், இரண்டு மருந்துகளுக்கும் இடையில் குறைந்தது இரண்டு மணி நேர இடைவெளி விட்டு எடுத்துக்கொள்ளலாம்.
இரண்டு மருந்துகளையும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொண்டால் ஒவ்வாமை, மருந்தின் செயல்திறன் குறைதல், நச்சுத்தன்மை உண்டாதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.