அல்லு அர்ஜுனுக்கு நடிகர் நானி ஆதரவு

Dinamani2f2024 09 262fa6igwvlq2fscreenshot 2024 09 26 120206.png
Spread the love

பாலிவுட் நடிகர் வருண் தவானைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டோலிவுட் நடிகர் நானியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சினிமா தொடர்புடையவற்றில் அரசு அதிகாரிகளும், ஊடகங்களும் காட்டும் ஆர்வத்தை சாதாரண மக்களின் மீதும் காட்ட வேண்டும் . நாம் நல்ல சமுதாயத்தில் வாழ்ந்திருக்கலாம். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். அதிலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருப்பதற்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாம் அனைவரும் தவறு செய்பவர்கள்தான். அதற்கு ஒருவர் மட்டும் பொறுப்பாக முடியாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற கவிதா (35) அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

எல்லா பழிகளையும் ஒருவர் மீது சுமத்துவது வருத்தமளிக்கிறது: நடிகை ராஷ்மிகா

மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், அல்லு அர்ஜுன் மீது 105, 118 (1) என்ற பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், அவரை வெள்ளிக்கிழமை (டிச. 13) கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அல்லு அர்ஜுன் தரப்பில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதராக ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பாலிவுட் நடிகர் வருண் தவான், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒருவரை மட்டுமே பழி சுமத்த முடியாது: அல்லு அர்ஜுன் வழக்கு பற்றி வருண் தவான்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *