முன்பெல்லாம் தெருவுக்கு ஒரு அழகு நிலையங்கள் இருந்த காலம் மலையேறி, தற்போது தெருவுக்கு ஒரு நவீன சலூன் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.
ஏன்.. அழகு பெண்களுக்கானது மட்டுமல்ல என்பதற்காகவா இல்லை, தங்களை சீர்படுத்திக் கொள்ள சலூன்கள் தேவை என்பதை ஆண்கள் தற்போது உணர்ந்திருப்பதாலா என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியதில்லை. காலம் மாறிவிட்டது. அவ்வளவுதான்.
பெண்களுக்குப் போட்டியாக தங்களை அழகுப் படுத்திக் கொள்வதில் ஆண்களும் களம் இறங்கிவிட்டார்கள் என்பதே உண்மை. ப்ளீச்சிங், ஃபேஷியல், புதுவிதமான ஹேர்ஹட், ட்ரெஸ்ஸிங் என்று ஆண்கள் தங்கள் தோற்றப் பொலிவை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள்.
எங்குச் சென்றாலும் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்பதற்காக சருமப் பராமரிப்பு மற்றும் தலைமுறை பராமரிப்பில் சிறிது கவனம் செலுத்தினால் தன்னம்பிக்கை அதிகரிப்பதும் இதற்கு ஒரு காரணம்.