தாயகம் திரும்பிய கௌதம் கம்பீர்
பார்டர் – கவாஸ்கர் தொடருக்காக ஆஸ்திரேலியாவில் உள்ள கௌதம் கம்பீர், தனிப்பட்ட அவசர காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரது குடும்பத்தினருடன் இன்று (நவம்பர் 26) அதிகாலை இந்தியா திரும்பினார். தனிப்பட்ட தவிர்க்க இயலாத அவசர காரணங்களினால் அவர் தாயகம் திரும்பியுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அடிலெய்டில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அவர் அணியுடன் மீண்டும் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.