மதுரை அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்தப்படுவது வழக்கம். மிகவும் பிரபலமான இந்த போட்டியை கிராம கமிட்டி குழுவினர் மற்றும் தென்கால் பாசன விவசாயிகள் என இருதரப்பினர் நடத்தி வந்தனர்.
இவர்களுக்குள் கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக யார் போட்டியை நடத்துவது என்ற மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக கடந்த 30ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது திடீரென மோதல் ஏற்பட்டது,
இந்நிலையில், இன்று காலை மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அமைச்சர் மூர்த்தி அவினியாபுரம் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
ஒருதலைப்பட்சமாக விழா நடத்தப்படுவதாக கூறியதோடு, முகூர்த்தக்கால் நடும் விழாவுக்கு அனைத்து சமூக மக்களையும் அழைக்கக்கூறி பொதுமக்கள் அமைச்சர் மூர்த்தியுடன் வாக்குவாதம் செய்தனர்.
நீதிமன்ற ஆணையை பின்பற்றி அரசு நடத்தும் விழாவில் எந்த பாரபட்சமும் இல்லை என்றும், ஆண்டுதோறும் அனைத்து தரப்பினரையும் அழைத்தே விழா நடத்தப்படுவதாக அமைச்சர் விளக்கம் அளித்தனர். அங்கிருந்த அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
