விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை!
இதனைத்தொடர்ந்து அதிமுகவை விஜய் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ” ஒரு சம்பவம் (கரூர்) நடந்து 72 நாட்கள் கழித்து தான் அவர் வெளியில் வந்தார்.
வெளியே வந்தால் தான் விஜய்க்கு விஷயம் தெரியும். விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை.
ஒரு கூட்டணி கட்சிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்று கூட அவருக்கு தெரியவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமைத் தாங்கும் என்று ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார்கள்.
ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா?. ஒரு முறையாவது முதலில் செய்தியாளர்களைச் சந்தித்து அவரை பேச சொல்லுங்கள்.

யாரை குறிப்பிடுகிறார்?
ஊழல் சக்தி என்று அவர் யாரை குறிப்பிடுகிறார். எங்களை எல்லாம் ஊழல் என்று சொல்லவே முடியாது.
அதிமுக ஆட்சியில் என்னை ஊழல்வாதி என்று குற்றம்சாட்டி இருந்தார்கள். ஆனால் நான் நிரபராதி என்று நீதிப்பெற்று வெளியில் வந்திருக்கிறேன்.
அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒருத்தர் தவெகவில் இணைந்திருக்கிறார். அவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்து வெளியே வந்தவர் தான். அப்போது விஜய் யாரைக் குறிப்பிடுகிறார்.
எங்களைக் குறிப்பிட்டு சொன்னால் அதற்கான பதிலை தெளிவாகச் சொல்லுவோம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.