“அவருடைய எனர்ஜி அது ஒரு துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டு போல இருக்கும்” – துரை செந்தில்குமார் |”His energy is like a bullet fired from a gun.” — Durai Senthilkumar

Spread the love

ஷாம் சார் இப்படத்திற்குள் வந்தது அந்தக் கதாபாத்திரத்தை மெருகேற்றியது. ஆண்ட்ரியா மேடம், விவேகா சார், மோகன் ராஜன் என அனைவருக்கும் என் நன்றி.

குறிப்பாக விவேகா சாருடன் பணியாற்ற வேண்டும் என்ற என் ஆசை இந்தப் படத்தில் நிறைவேறியது. குழந்தை நட்சத்திரம் இயல்பாகவே திறமை கொண்டவர்.

அவரின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு நான் பல சிரமங்களைச் சந்தித்தேன். பல கதைகள் இருந்தும் அது படமாக மாறவில்லை. அந்த நேரத்தில்தான் லெஜெண்ட் சாரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

லீடர் படக்குழு

லீடர் படக்குழு

அதே நேரத்தில் ‘கருடன்’ வாய்ப்பும் வந்தது. நான் ஒரு திரைப்படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னபோது, ‘நான் உங்களுக்காக காத்திருக்கிறேன், இந்தப் படத்தை நாம்தான் செய்யப் போகிறோம்’ என்றார்.

அந்த நம்பிக்கையே இந்தப் படத்தின் அடித்தளம். அவருடைய எனர்ஜி, அது ஒரு துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டுபோல இருக்கும். எந்த நேரத்திலும் அதே உற்சாகம் அவரிடம் நிறைந்திருக்கும்.

நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார். ‘நமக்காக நூறு பேர் வேலை செய்கிறார்கள். நாம் தாமதிக்கக் கூடாது’ என்று அவர் சொல்வார்.

அது எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது. மகாபாரதத்தில் அர்ஜுனன் பறவையின் கண்களை மட்டுமே பார்க்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல வெற்றி மட்டுமே அவரின் இலக்கு.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *