“அவரை ஏன் எல்லாரும் வாத்தியார்னு கூப்பிடுறாங்க தெரியுமா?” – நடிகர் கார்த்தி | “Do you know why everyone calls him Vaathiyar?” – Actor Karthi

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தனது 26-வது படமாக ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். “சூது கவ்வும், காதலும் கடந்து போகும்” உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

க்ரித்தி ஷெட்டி

க்ரித்தி ஷெட்டி
Mohammad Mansoor V

இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் கார்த்தி, “ வா வாத்தியார் படத்தில் மிகவும் பக்தியுடன் நடித்திருக்கிறேன். இந்த படம் பார்க்கும்போது எம்.ஜி.ஆருக்கும் அவரின் இரத்தத்தின் இரத்தமான ரசிகர்களுக்கும் என்ன உறவு இருந்ததுனு நீங்க புரிஞ்சிகிட்டாலே, அதை நாங்க பெரிய சக்சஸ்-னு நம்புவேன். ஒரு ரசிகனுக்கும் அவனுடைய தலைவனுக்கும் இருக்கிற அந்த உறவுதான் இந்த படத்தோட கோர் எமோஷன்னு.

அந்த மீசை வரையறதுல இருந்து, எம்.ஜி.ஆர் மாதிரி மேக்கப் போடும்போது அவ்வளோ பயமா இருக்கும். அவர் எப்படி இருந்திருப்பாருன்னு யோசிச்சாலே நமக்கு தலையெல்லாம் சுத்திரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *