டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்க இருக்கிறது.
பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என வங்கதேச அணி கடைசி நேரத்தில் இந்தத் தொடரில் இருந்து விலகியது.
அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து விளையாடும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து வங்கதேச அணிக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்திருக்கிறது.
பாகிஸ்தானின் இந்தப் புறக்கணிப்பிற்கு ஐசிசி கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாகிஸ்தானின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுதான் இந்தியாவில் நடக்கும் போட்டியை இலங்கைக்கு மாற்றினோம்.