“அவர்கள் டொனால்டு ட்ரம்பை கொலை செய்ய முயன்றனர்” – ஐ.நா சபையில் ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு | They tried to assassinate Donald Trump: US accuses Iran at UN

Spread the love

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆசியாவின் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா போர்க் கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தியது.

அதேசமயம் ஈரானுடன் மறைமுகப் பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தது. ஆனால் இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் திடீரென அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஒரே நேரத்தில் “ஆபரேஷன் எபிக் ப்யூரி’ என்ற பெயரில் ஈரான் மீது வான்வெளித்தாக்குதலை நடத்தியது.

இதையடுத்து துபாய், அபுதாபி, இஸ்ரேல் போன்ற அமெரிக்க ஆதரவு நாடுகளில் ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரோடு அவரது மகள், மருமகள், பேரக்குழந்தைகளும் கொல்லப்பட்டனர். இதனை ஈரானும் உறுதிபடுத்தியிருக்கிறது.

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொலை செய்யப்பட்ட பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க பிரதிநிதி மைக் வால்ட்ஸ் கூறுகையில், ”அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல ஈரான் நிர்வாகம் முயற்சித்தது.

கடந்த கால நடவடிக்கைகள் இருந்தபோதிலும் ஈரானியத் தலைமை இப்போது தன்னைப் பாதிக்கப்பட்ட நாடாகக் காட்டிக்கொண்டிருக்கிறது. அவர்கள் ஒரு பாதிக்கப்பட்டவர் போல் தோற்றமளிக்கிறார்கள். இப்போது நாங்கள் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

தங்களது தலைவரின் மரணத்திற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. அதோடு புதிதாக அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளது.

இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், ”ஈரான் இன்று மிகவும் கடுமையாகத் தாக்கப் போவதாகக் கூறியது. இதுவரை தாக்கப்பட்டதை விடவும் கடுமையாகத் தாக்குவோம் என்று கூறி இருக்கிறது.

அவர்கள் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது, எப்படியிருந்தாலும், அவர்கள் செய்தால், இதுவரை கண்டிராத ஒரு சக்தியால் நாங்கள் அவர்களைத் தாக்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் வரும் நாட்களில் மேலும் நிலைமை மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *