அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்3: விறுவிறுப்பான LIVE COOKING! இறுதிச்சுற்றுக்கு சென்ற மூவர்!

Spread the love

சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்ஸோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்யா, சுப்ரீம் ஃபர்னீச்சர், இந்தியன் ஆயில், மெரிபா பன்னீர், விகடன் பிளே, ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கும் `அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்-3’ போட்டி நேற்று திண்டுகல்லில்  சிறப்பாக நடைபெற்று முடிந்தது, போட்டியின் விதிமுறை படி வீட்டிலிருந்தே  சமைத்து எடுத்து வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

இந்த போட்டியில் மொத்தம் 125 போட்டியாளர்கள், தக்காளி அல்வா, நெல்லிக்காய் லேகியம், வெற்றிலை பாயசம் என பலவகையான உணவுகளை வைத்து திண்டுக்கல்லையே மணக்க வைத்தனர்.

முதல் சுற்றில், தரமான சுவை, ஆரோக்கியம், செய்முறை  போன்ற அடிப்படைகளை கொண்டு அடுத்த கட்ட சுற்றிற்கு 10 நபர்களை தேர்வு செய்தார் போட்டியின் நடுவர் செஃப் தீனா.

முதல் சுற்று முடிந்து காத்திருந்த போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக ஜாலியான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. 

சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்3

சத்யா, சௌபாக்யா, நாகா, அஸ்வின் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட ஸ்பான்சர்கள்  மூலம், எந்த சீசனிலும்  இல்லாத அளவில் 25 பேருக்கு முதல் சுற்றில் வீட்டில் சமைத்து காட்சிப்படுத்திய உணவுகளில் சிறந்தவற்றை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது, இதில் நாகா சுவை சாம்பியன் பட்டத்தை  சுவாதி தட்டி சென்றார்.

இரண்டாவது சுற்றில் லைவ் குக்கிங் செய்யப்பட்டது, நாகா பிராண்ட், சக்தி மசாலா, கோல்ட் வின்னர், போன்ற பொருட்களை வைத்தும் அதனுடன் ஒரு இனிப்பு உணவையும் சேர்த்து சமைக்க வேண்டும் என்பதுதான் இரண்டாவது சுற்றின் விதிமுறை.

ராகி அடை, முட்டை தொக்கு, சிக்கன் பெப்பர் ட்ரை, வெஜ் போண்டா, ரவா லட்டு, சிக்கன் சிப்ஸ், உப்பு கறி, கறிவேப்பிலை சிக்கன், பன்னீர் எக், ராகி ரொட்டி, ஜவ்வரிசி பாயசம், சிக்கன் கிரேவி, ரவா ஸ்வீட், கார்ன் ப்ஃளவர் ஸ்வீட், ராகி மாவு கைமா, கேசரி என பத்து போட்டியாளர்களும் பலவகையான ரெசிபிகளை  செய்து அசத்தினர்.

சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்3

இதில் கடும் போட்டி நிலவியது. இதன் முடிவில் உமா மோகன், விஜய், துர்கா பாய் ஆகிய மூவரையும் தேர்வு செய்தார் செஃப் தீனா, இவர்களின் ரெசிபிகள் அனைத்தும் அனைவரது நாவையும் கட்டி இழுத்தது.

இதில் ட்விஸ்ட் ஆக ஒரு போட்டியாளரை மட்டும் தேர்வு செய்து அறிவிக்காமல் அந்த ஒரு நபரை மட்டும் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக சென்னைக்கு அழைக்க இருக்கின்றனர்.

இதனையடுத்து, சக்தி மசாலா, லலிதா ஜுவல்லரி, ஆர் கே ஜி நெய்,அஸ்வின் ஸ்வீட்,நாகா, கோல்ட் வின்னர், சௌபாக்யா, சுப்ரிம் ஃபர்னீசர், இந்தியன் ஆயில் போன்ற ஸ்பான்சர்கள் மூலம் அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கபட்டது, லைவ் குக்கிங்கில் கலந்துகொண்ட மற்ற ஏழு நபர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

சமையல் சூப்பர் ஸ்டார் சீசன்3

இரண்டாவது சுற்றில் தகுதி பெற்ற மூவரும் சென்னையில் நடக்கவிருக்கும் இறுதி போட்டியில் பங்கேற்ப்பார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *