அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்: Live Cooking இல் கலக்கிய போட்டியாளர்கள்; இறுதிச்சுற்றில் மூவர் \ Coimbatore Aval samayal super star event 2026

Spread the love

 சக்தி மசாலா, சத்யா ஏஜென்சீஸ், நாகா, கோல்டு வின்னர், எக்சோ, அஸ்வின் ஸ்வீட்ஸ், ஆர்.கே.ஜி நெய், லலிதா ஜுவல்லரி, சௌபாக்கியா, சுப்ரீம் பர்னிச்சர், மெரிபா பன்னீர், விகடன் ப்ளே, இண்டேன், கார்த்திபுரம், ஹலோ எஃப்.எம் ஆகியவை இணைந்து வழங்கும் “அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் சீசன் 3” கோயம்புத்தூரில் 22.02.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.

அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்

அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்

அவள் விகடனின் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி இரண்டு சுற்றாக நடைபெற்றது. முதல் சுற்றின் விதிமுறைப்படி போட்டியாளர்கள் உணவுகளை வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

சமைத்துக் கொண்டு வந்த உணவை நடுவர் தீனாவுக்குக் காட்சிப்படுத்தி உணவின் செய்முறையை விளக்கினர். 90ஸ் கிட்ஸ்களுக்குப் பிடித்த ஜம்பார் மிட்டாய், 1234 பால் பர்ஃபி, ராகி நாட்டுக்கோழி பிரியாணி, ராகி மாப்பிள்ளை சம்பா அரிசி அல்வா எனப் பல வகையான புதுவிதமான உணவுகள் போட்டியாளர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சுவை, ஆரோக்கியம், செய்முறை, காட்சிப்படுத்திய விதம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 10 பேர் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *