அஸ்ஸாமில் நடைபெறவுள்ள அரசுத் தேர்வையொட்டி, அக். 27 ஆம் தேதியில் மாநிலம் முழுவதும் இணையச் சேவை முடுக்கப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஸ்ஸாமில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் (அக். 27) 28 மாவட்டங்களில் கிரேட் 4 பதவிகளுக்கான தேர்வை இரண்டு வேளைகளில் நடைபெறவுள்ளது.
1,484 மையங்களில் காலை 9 மணி முதல் 11.30 மணிவரையில் ஹெச்.எஸ்.எல்.சி. பதவிகளுக்கான தேர்வு நடைபெறும்; இந்த தேர்வுக்கு 8,27,130 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, 808 மையங்களில் பிற்பகல் 1.30 மணி முதல் 4 மணிவரையில் எட்டாம் நிலை பதவிகளுக்கான தேர்வு நடைபெறும்; இந்த தேர்வுக்கு 5,52,002 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதையும் படிக்க: காஸா: இஸ்ரேல் தாக்குதலால் 42,800 பாலஸ்தீனர்கள் பலி!
இந்த நிலையில், தேர்வு எழுதவிருப்பவர்கள் எந்தவிதமான ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4 மணிவரையில் அனைத்து வகையான இணைய சேவைகளும் முடுக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தேர்வு மையங்களில் மொபைல் போன் போன்ற சாதனங்களில் இணைய சேவை மூலம் நியாயமற்ற முறையில் தேர்வில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தடுக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.