இந்தியாவின் முதல் மூங்கில் – எத்தனால் ஆலை
அஸ்ஸாமில் கோல்கா மாவட்டத்தில், நுமாலிகர் எனும் இடத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் – எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
இந்த ஆலைக்கு பூஜ்ய கழிவு என்பதால் மூங்கிலின் அனைத்து பாகங்களையும் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆலையினால் உள்ளூர் பொருளாதாரம் ரூ.200 கோடி லாபம் அடையுமெனவும் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட கிழக்கு மாநிலங்களில் இருந்து இதற்காக 5 லட்சம் டன் பச்சை மூங்கில்கள் கொண்டுவரப்படும். இதனால், நேரடியாகவும் மறைமுகமாவும் 50,000 மக்கள் பயன்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது உலகின் முதல் மூங்கில் – எத்தனால் ஆலை என அஸ்ஸாம் மாநில செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.