கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்ததில் இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தை உலுக்கி இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க.கட்சியினர் சி.பி.ஐ.விசாரணை கோரி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தல் சி.பி.ஐ.விசாரணை தேவையில்லை என்று கூறிவருகிறது. இதனால் சட்டசபை கூட்டத்தொடரில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அ.தி.மு.க.உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
நாளை உண்ணாவிரதம்
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக நாளை(27ந்தேதி) சென்னையில் உண்ணாவிர போராட்டத்தை அ.தி.மு.க.அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நேர்மையான விவாதம் மறுக்கப்பட்டு, அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அடிப்படை ஜனநாயகத்திற்கு விரோதமானது!
எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மடைமாற்ற அரசியலால் கடந்துவிட முயற்சிக்கும் திமுக அரசிற்கு எனது கடும் கண்டனம்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை உடனே தொடங்க வேண்டும்; பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரியும் எனது தலைமையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை (27.06.2024- வியாழக்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம்!
போராட்டம் தொடரும்!
கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அ.இ.அ.தி.மு.க.வின் போராட்டம் தொடரும்!
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்: