கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி 18.79 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி 201 கோடி டாலராக உள்ளது.
முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 18.79 சதவீதம் குறைவாகும். அப்போது நாட்டின் ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி 247 கோடி டாலராக இருந்தது.
இருந்தாலும், முந்தைய ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாத ரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த ஜூலையில் அது 166 கோடி டாலராக இருந்தது.