ஆக.1 முதல் கனடா பொருள்களுக்கு 35% வரி அமல்! – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

dinamani2F2025 07 112F7j56cdgp2Ftrump and mark carney
Spread the love

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருள்களுக்கு 35 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறார். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு அதிக இறக்குமதி விதித்து டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாத அனைத்து நாடுகளுக்கும் 15 அல்லது 20 சதவிகிதம் மட்டுமே வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், திடீரென வரிவிதிப்புகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதில், கனடாவுக்கு 35 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த வரிவிதிப்புகளை கனடா ஏற்றுக்கொள்ளாமல் வரி அதிகரிப்பு நடவடிக்கைகளை எடுத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும், கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு சமூக வலைதளப் பக்கமான ட்ரூத் சோஷியலில் டிரம்ப் எழுதியுள்ள கடிதத்தில், “அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுப்பதில் கனடாவின் தோல்வியடைந்துவிட்டது” என்றும் விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், பிரேசில், இலங்கை, அல்ஜீரியா, புரூணே, இராக், லிபியா, மால்டோவா மற்றும் பிலிப்பின்ஸ் உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிவிதிப்புக்கான கடிதங்களை வெளியிட்டுள்ளார். இதில், அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி கட்டண விகிதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், அல்ஜீரியா, இலங்கை மற்றும் இராக் ஆகிய நாடுகளுக்கு 30 சதவிகித வரியும், புரூணே, லிபியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளுக்கு 25 சதவிகிதமும், பிலிப்பின்ஸுக்கு 20 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, அமெரிக்கா இலங்கையுடன் 2.6 பில்லியன் டாலர், அல்ஜீரியாவுடன் 1.4 பில்லியன் டாலர், இராக்குடன் 5.9 பில்லியன் டாலர், லிபியாவுடன் 900 மில்லியன் டாலர், பிலிப்பின்ஸுடன் 4.9 பில்லியன் டாலர், புரூணேயுடன் 111 மில்லியன் டாலர் மற்றும் மால்டோவாவுடன் 85 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களின் மீது வர்த்தக ஏற்றத்தாழ்வைக் கொண்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஏழு நாடுகளுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் மட்டுமே, 30 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட அமெரிக்கப் பொருளாதாரத்தில் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Donald Trump says Canada to face 35 percent tariff rate starting August 1

இதையும் படிக்க : நாசாவில் உயர்பொறுப்பில் உள்ள 2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டிரம்ப் அரசு முடிவு!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *