சுதந்திர தினத்தை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்டோருக்கு வீரதீர செயலுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு சேவைகள், ஊர்க்காவல் படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகளுக்கான விருது பெறுபவர்களின் அதிகாரபூர்வ பட்டியலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த விருதுகளில் வீரதீர விருதுகள், சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் மற்றும் சிறப்பான சேவைக்கான பதக்கம் ஆகியவை அடங்கும்.
இந்த ஆண்டு, மொத்தம் 1,090 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படவிருக்கின்றன. இதில், 152 பேர் ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், மூன்று பேர் வடகிழக்கைச் சேர்ந்தவர்கள்.
233 பேருக்கு வீரதீர விருதும், 99 பேருக்கு சிறப்பு சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கங்கள், 758 பேருக்கு சிறப்பாக சேவையாற்றியதற்கான பதக்கங்களும் வழங்கப்படவுள்ளது.